மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள கைலாஷ்பூரி கிராமத்தில், 58 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, 16 வயது சிறுவன் இவர்களது வீட்டிற்கு டிவி பார்ப்பதற்காக வந்துள்ளான். அப்போது, வீட்டில் இருந்த செல்போனை அந்த சிறுவன் திருடியுள்ளான்.
இதனை அறிந்த அந்த பெண், சிறுவனிடம் இருந்து செல்போனை வாங்கிவிட்டு, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனால், கடும் கோபம் அடைந்த அந்த சிறுவன், மூதாட்டியை பழிவாங்குவதற்கு காத்திருந்தான். இந்நிலையில், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி அன்று, அந்த 58 வயது பெண், வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்துக் கொண்டு அங்கு வந்த சிறுவன், அந்த பெண்ணின் வாயில் துணிகளை அடைத்து, யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், கூரிய ஆயுதங்களை கொண்டு, அந்த பெண்ணை கடுமையாக தாக்கிய அவன், பெண்ணுறுப்பை கட்டையால் தாக்கி சிதைத்துள்ளான்.
பின்னர், அந்த பெண் உயிரிழந்ததும், வீட்டில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும், நகையையும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடினான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.