நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் அதிகம் ஆர்வம் செலுத்தி வந்துள்ளான். இந்த ஆர்வத்தின் காரணமாக, கோவை மாவட்டத்தை சேர்ந்தவ நபரிடம், ஆன்லைனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் சிறுவனிடம் செல்போனில் பேசிய அந்த நபர், கோயம்புத்தூருக்கு வருமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பி அங்கு சென்ற அந்த சிறுவன், மர்ம கும்பலிடம் சிக்கித் தவித்துள்ளான். அந்த கும்பல், அவனுக்கு, பெண் போல அலங்காரம் செய்து, பாலியல் தொழிலில் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரமாக பாலியல் வன்கொடுமையை சந்தித்து வந்த அந்த சிறுவன், தனது பெற்றோருக்கு ரகசியமாக தகவல் கொடுத்துள்ளான்.
இதையடுத்து, அந்த கும்பலை காவல்நிலையத்தில் வைத்து, தங்களது பாணியில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பிறகு, உண்மையை ஒப்புக் கொண்ட அவர்கள், சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இளம்பெண் வேடத்தில் இருந்த மகனை பார்த்து கண்ணீர் விட்ட பெற்றோர் அவரை அணைத்துக் கொண்டனர்.
நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுத சிறுவன் பெற்றோருடனே செல்ல போலீசாரிடம் சம்மதம் தெரிவித்தார். மேலும் சிறுவனிடமிருந்து பறித்த 2 பவுன் தங்க நகையையும், ரூ.20 ஆயிரத்தையும் அந்த கும்பல் திருப்பி கொடுத்தது. இதைத்தொடர்ந்து கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் மீண்டும் இதுபோல் செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.