Connect with us

Raj News Tamil

பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரர்!

தமிழகம்

பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரர்!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். 23 வயதாகும் இவர், 17 வயதாகும் பள்ளி சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர்.

இதற்கிடையே, மோகன்தாஸிற்கு ராணுவ பணி கிடைத்ததால், அசாம் மாநிலத்திற்கு, பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை, மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். அதில், மோகன்தாஸ் உடனான காதலும், இருவரும் நெருங்கி பழகியதால் தான் சிறுமி கர்ப்பமாகியுள்ளர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், போக்சோ வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top