குஜராத்தில் அரபிக் கடல் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் இந்திய கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த படகை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அதில், 173 கிலோ போதைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குஜராத்தில் ஏற்கனவே 86 கிலோ போதைப்பொருள் பிடிபட்ட நிலையில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.