78 வயது முதியவரை காதலித்த 18 வயது பெண்!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரஷத் கங்காகோப். 78 வயதான இவர், விவசாயம் செய்து வருகிறார். திருமணமே செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த ரஷத், 3 வருடங்களுக்கு முன்பு, திருமண நிகழ்வு ஒன்றில், ஹலிமா என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

பார்த்த நொடியிலேயே காதலில் விழுந்த அவர், அந்த பெண்ணிடமும் தனது காதலை கூறியுள்ளார். 15 வயதான அந்த பெண்ணும், அவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, 3 ஆண்டுகள், இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

18 வயது பெண்ணை 78 வயதுடைய நபர் திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரஷத்திற்கும், ஹலிமாவிற்கும் இதுதான் முதல் காதல் என்பது குறிப்பிடத்தக்கது.