தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணை பார்த்தாலே சில பெண்களுக்கு பிடிக்காது. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில், முதல் மனைவியே, தனது கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.
அதாவது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் உள்ள ராம்தேவ் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெண்கள், தங்களது கிராம வழக்கத்தின்படி, கணவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கின்றனர்.
இந்த கிராமத்தின் வழக்கத்தின்படி, முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது என்றும், அப்படியே குழந்தை பிறந்தாலும், அது பெண் குழந்தையாகவே இருக்கும் என்றும், கூறப்படுகிறது.
இதனால், முதல் மனைவியே 2-வது திருமணத்தை தாங்களே முன்வந்து நடத்துவது போல், நடைமுறை அந்த கிராமத்தில் உள்ளது. இந்த நடைமுறைகளை, அப்பெண்கள் விருப்பத்தின் பேரிலேயே நடப்பதாக கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், ஜதீகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி, ஆண்கள் அப்பகுதியில் உள்ள பெண்களை, சுரண்டுவதற்கு பயன்படுத்துகின்றனர் என்று, சமூக ஆர்வலர்கள் பலர் கூறி வருகின்றனர். மேலும், இந்த நடைமுறையை அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.