2-வது திருமணம் குறித்து ஓபனாக பேசிய நடிகை மீனா..!

1982-ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் பல்வேறு மொழிகளில் நடித்த இவர், ரஜினியின் முத்து படத்தில் தில்லானா தில்லானா பாடலுக்கு இடுப்பை நெளித்து சுளித்து ஆடிய ஆட்டத்தில் அனைவரையும் மயங்க வைத்தார். இதையடுத்து 90-கிட்ஸ்களின் உள்ளத்தில் சிறகடித்தத் தொடங்கிய மீனா, பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமானார். இந்த நிலையில் இவரது கணவர் வித்யாசாகர் கடந்த வருடம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து மீனா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து பேசிய மீனா, நான் துக்கத்தில் இருந்தே இன்னும் வரவில்லை, இதற்கிடையில் இதுபற்றி பேசுவதா, மேலும் என்னை பற்றி பரவும் தகவல் எல்லாம் வதந்தியே என்று பதிலடி கொடுத்துள்ளார்.