சீனாவில் பரவும் புதிய வைரஸ் இந்தியாவிலும்.. 2 குழந்தைகள் பாதிப்பு..

சீனாவில் இருந்து தான் கொரோனா என்ற வைரஸ் பரவி, உலகம் முழுவதையும் புரட்டி போட்டது. இதனால், சீனாவில் இருந்து ஒரு வைரஸ் பரவினாலே, பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், எச்.எம்.பி.வி என்ற வைரஸ், சீனாவில் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் தாக்கப்பட்டால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், 14 வயதுக்கு உட்பட்டவர்களை தான், இந்த வைரஸ் தாக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இருக்க, இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி இருப்பதாக, புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, கர்நாடக மாநிலம் பெங்களூரில், 3 மாத பெண் குழந்தைக்கும், 8 மாத ஆண் குழந்தைக்கும், இந்த தொற்று ஏற்பட்டிருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு குழந்தைகளும், சமீபத்தில் வெளிநாட்டிற்கு பயணம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று, மருத்துவர்கள் குழம்பியுள்ளனர். மேலும், 2 குழந்தைகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்த ஆண்டு முழுவதும் கண்காணிப்பு பணி தொடரும் என்றும் கூறியுள்ளது.

RELATED ARTICLES

Recent News