தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது லால் சலாம் மற்றும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் பவுண்டேசன் என்ற பெயரில் போலி பேஸ்புக் முகவரி ஏற்படுத்தி ரூ.2 கோடி பண மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ரஜினிகாந்த் பவுண்டேசன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பபுகாரில் ரூ. 2 கோடி வசூல் செய்து 200 பேரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசு வழங்குவதாகக் கூறி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.