வாரிசு படத்தால் 2 கோடி ரூபாய் நஷ்டம்….கேரள விநியோகஸ்தர் புகார்

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கேரளாவில் வாரிசு படத்தை விநியோகித்த ராய் என்பவர் தனக்கு 2 கோடி ருபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக புகார் கூறி இருக்கிறார். அந்த பணத்தை திரும்பி தரும்படி தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கேட்டுள்ளார். அதற்கு தில் ராஜு தர முடியாது என கூறியுள்ளார்.

தற்போது அவர் விஜய்க்கு கடிதம் எழுதி இருக்கிறார். விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வாரிசு திரைப்படம் புது பிரச்சனையை உருவாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News