கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஸ்வர்னராஜ். இவரும், இவரது நண்பர் ஜெரின் என்பவரும், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீது, பொது இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த காவலர் விவேகானந்தன், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால், அப்போது மது போதையில் இருந்த அவர்கள், விவேகானந்தன் மீதும், தாக்குதல் நடத்தியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், விவேகானந்தனை மீட்டு, ஸ்வர்னராஜ் மீதும், ஜெரின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர், வழக்கு பதிவு செய்த கீறிப்பாறை காவல்துறையினர், அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். மதுபோதையில் இருந்த 2 பேர், காவல் ஒருவரை தாக்கியுள்ள இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.