Connect with us

Raj News Tamil

இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம்!

விளையாட்டு

இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம்!

அயா்லாந்தில் நடைபெறும் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வியாழக்கிழமையுடன் 2 தங்கம் உள்பட 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

காம்பவுண்ட் ஜூனியா் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரியன்ஷ்/அவ்னீத் கௌர் கூட்டணி 146-144 என்ற புள்ளிகள் கணக்கில் இஸ்ரேல் இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அதேபோல் ஐஸ்வா்யா சா்மா/அதிதி சுவாமி/ஏக்தா ராணி ஆகியோர் அடங்கிய காம்பவுண்ட் மகளிர் அணி 214-212 என அமெரிக்க அணியை சாய்த்து தங்கத்தை தட்டிச் சென்றது.

காம்பவுண்ட் கேடட் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் மானவ் ஜாதவ்/ஐஸ்வா்யா சா்மா ஜோடி மெக்ஸிகோ இணையை சாய்த்து பதக்கம் பெற்றது. அதேபோல், ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் ரிதி/பார்த் சலுன்கே இணை 5-3 என்ற புள்ளிகள் கணக்கில் சீன ஜோடியை வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.

More in விளையாட்டு

To Top