நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த முதியவர் இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிச்சாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்கு வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் விரலில் மை வைத்து விட்டு வாக்குபதிவு செய்யும் இயந்திரத்திற்கு அழைத்து செல்லும் போது திடிரென மயங்கி விழுந்து வாக்குச்சாவடி மையத்திலே உயிரிழந்தார்.
இச்சம்பவங்கள் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.