தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த 4 மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழைக்கான ரெடி அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் சிவகுமார் என்பவரது வீடு கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. கட்டிட ஈடுபாடுகளில் சிக்கிய சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதே போல் மேலப்பாளையம் நடராஜபுரம் பகுதியில் பட்டத்தி என்ற 75 வயதான மூதாட்டியின் வீடும் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.