துணிவு படத்துக்கு அடுத்து அஜித்குமார் நடிக்க இருக்கும் திரைப்படம் ஏகே 62. தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை, மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஏகே 62 படத்தில் அருண் விஜய் மற்றும் அருள் நிதி வில்லனாக நடிக்க வைக்க பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில், அருண்விஜய் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே ஏகே 62 படத்திலும் இணைய இருப்பதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.