உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த ஷிவ்குமாருக்கு, மஞ்சு என்ற மனைவியும், மான்சி என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கணவன்-மனைவி இருவரும், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிறுமி காணவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, பக்கத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், பூட்டிக் கிடந்த வீட்டை திறந்து, சோதனை செய்துள்ளனர். அதில், லேப் டாப் பேக் ஒன்றில், சிறுமி மான்சி, சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனை செய்வதற்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள பக்கத்து வீட்டுக்காரரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர். 2 வயது பிஞ்சு குழந்தை, லேப்-டாப் பையில் சடலமாக கிடந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.