இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இங்கு அளிக்கப்படும் சான்றிதழ்கள் தகுதியற்றவை எனவும் மாணவர்களுக்கு யு.ஜி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள், உத்தர பிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திராவில் தலா 2 பல்கலைக்கழகங்கள், கா்நாடகம், மராட்டியம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.