கர்நாடகாவை பெரிதும் நம்பும் காங்கிரஸ்? காரணம் இதுதான்!

2024-ஆம் ஆண்டு அன்று, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சி, மீண்டும் அதிகாரத்தை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தங்களது வியூக மைய இடமாக, கர்நாடக மாநிலத்தை, காங்கிரஸ் நிர்ணயித்துள்ளது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளை, கர்நாடக மாநிலத்தில் இருந்து தொடங்க இருக்கிறார்களாம்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வு செய்ய உள்ளார்களாம்.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜுவாலா, “2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி நிச்சயம் 20 இடங்களை, கர்நாடக மாநிலத்தில் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. சொல்ல முடியாது, 25 இடங்களையும் காங்கிரஸ் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த உற்சாகமும், நம்பிக்கையும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் பெறு வெற்றியில் இருந்து வந்துள்ளது என்பது நமக்கு தெளிவாகிறது. அதாவது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி, அபார வெற்றி பெற்றது.

ஆனால், வெறும் 66 இடங்களை மட்டுமே வென்ற பாஜக, படுதோல்வியை சந்தித்தது. இதேபோல், கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி 122 இடங்களை கைப்பற்றி, அபார சாதனை பெற்றது.

ஆனால், பாஜக கட்சி, வெறும் 40 இடங்களில் மட்டும் தான், அப்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. இவ்வாறு, மற்ற மாநிலங்களை காட்டிலும், கர்நாடகாவில் அதிக வெற்றி விகிதங்களை வைத்திருப்பதால், அந்த மாநிலத்தை, மைய வியூக இடமாக மாற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

RELATED ARTICLES

Recent News