புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற நான்கு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே 33 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண் டிருக்கும் பொழுது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.