2023 ஆங்கில புத்தாண்டு நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. புத்தாண்டை வரவேற்பதற்காக டிசம்பர் 31ஆம் தேதி இரவே தயாரக இருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் வினோதமாக புத்தாண்டை வரவேற்றுள்ளனர். கராச்சியின் சில இடங்களில் நள்ளிரவு 12 மணி ஆனதும் நகரமே அதிர கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை வரவேற்றனர். அதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் 13 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களில் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. பலத்த பாதுகாப்பில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.