சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ், தெலுங்கு உள்பட 22 பயிற்று மொழிகள்!

நாடு முழுவதும் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் பயிற்று மொழியாக உள்ளன. தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா உள்ளிட்ட 22 மொழிகளையும் பயிற்று மொழியாகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கை (என்இபி) தாய்மொழி வழியிலான கல்விக்கு முக்கியத்தும் அளிக்கிறது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா உள்பட 22 மொழிகளைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள விதிகளின்படி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை புதிய பயிற்றுமொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படும்.

ஹிந்தி அல்லது ஆங்கிலத்தைவிட, தனது தாய்மொழியில் பாடங்களைக் கற்கும்போது, மாணவா்களால் எளிதான முறையில் அவற்றை புரிந்துகொள்ள முடியும்.

பிற மொழிகளில் பாடப்புத்தகங்களை உருவாக்கும் பணியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) ஈடுபடும். தோ்வுகளை இந்த மொழிகளில் நடத்தவும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அவா் கூறினாா்.

RELATED ARTICLES

Recent News