காசா பகுதியில் 23 லட்சம் மக்கள் குடிநீர்இன்றி பரிதவித்து வருகின்றனர் ஐ.நா. சபையின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பின் செயலாளர் பிலிப் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக காசாவுக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளது. காசா பகுதி குடிநீர் கையிருப்பு முழுமையாக தீர்ந்துவிட்டது. இதன்காரணமாக 23 லட்சம் மக்கள் குடிநீர்இன்றி பரிதவித்து வருகின்றனர்.
உடனடியாக குடிநீர் கிடைக்காவிட்டால் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கிணறுகள், நீர்நிலைகளில் உள்ள அசுத்தமான நீரை மக்கள் பருகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன.
மின்சாரம் இன்றி கடந்த ஒரு வாரமாக காசா முழுவதும் இருளில் மூழ்கியிருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல்அரசு மீண்டும் தொடங்க வேண்டுகிறோம். இவ்வாறு பிலிப் தெரிவித்துள்ளார்.