அடுத்த 2025-ம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறைநாட்கள் தவிர, இதர பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில், அடுத்த 2025-ம்ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25-ந்தேதி வரை மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் ஆகும். அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாகும்.
இதில், ஏப்ரல் 1-ம் தேதி திங்கள் கிழமை விடுமுறை என்பது வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும்.
ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ரம்ஜான், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி பண்டிகை ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். மேலும், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளி, சனிக்கிழமைகளில் வருவதால் 3 நாள் தொடர் விடுமுறையாக அமைகிறது.
மேலும் இந்தாண்டு, குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, பக்ரீத் பண்டிகை, மொகரம், கிருஷ்ண ஜெயந்தி சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் வருகிறது.