20 நாளில் 25 கோடி பேருக்கு கொரோனா தொற்று : பகீர் கிளப்பும் தகவல்

கொரோனா புதிய அலை காரணமாக சீனா கடந்த சில வாரங்களாக சிக்கித்தவித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து மருத்துவமனையில் கூட்டம் அலைமோதி வருகின்றன.

அங்குள்ள மயானங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. சீனாவின் நிலைமை அந்நாட்டை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளை மீண்டும் பீதியடைய வைத்துள்ளது.

டிசம்பர் 1 முதல் 20ஆம் தேதி வரை சீனாவில் கிட்டத்தட்ட 25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனா அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என சர்வதேச ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.