கார்த்திகை தீபத் திருவிழாவில் மலையேற 2500 பேருக்கு அனுமதி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபம் கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6-ஆம் தேதி பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயரத்தில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இதில் பங்கேற்க சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் முகேஷ் அறிவித்துள்ளார்.

இதற்கான நுழைவுச்சீட்டு செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மலை ஏறுபவர்கள் தண்ணீர் குவலையை மேலேயே தூக்கி எறியாமல் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News