சிக்கிம் வெள்ளத்தில் 27 பேர் உயிரிழப்பு: 142 பேர் மாயம்!

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது. இதில் 7 பேர் ராணுவ வீரர்களாவர்.

சிக்கிம் மாநிலத்தில் அக்.3-ம் தேதி லோனாக் ஏரிப் பகுதியில் அதிகாலை மேக வெடிப்பால் அதீத கனமழை பெய்தது. இதையடுத்து, தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுங்தாங் பகுதியில் உள்ள நீர்மின் திட்ட அணை உடைந்தது. இதனால், மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாங் ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின.

இந்த திடீர் வெள்ளத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,413 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7 ராணுவ வீரர்களும் அடக்கும். 23 ராணுவ வீரர்கள் உட்பட 142 பேரை தேடும் பணி இன்னும் நடந்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவாரண முகாம்களில் 6,875 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 22 நிவாரண முகாம்களை அரசு அமைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News