Connect with us

Raj News Tamil

27 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை! – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழகம்

27 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை! – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படும் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘’தமிழகத்தில் மத்திய சிறைகளில் நீண்ட நாள்களாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்வதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதில், சிறையில் நன்னடத்தையுடன் மொத்த தண்டனையில் 66 சதவீதம் அனுபவித்தவா்களும், 10 ஆண்டுகள் சிறையில் உள்ளவா்களும், விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவா்கள் என அடையாளம் காணப்பட்டனா்.

அதேவேளையில் பாலியல் துன்புறுத்தல், முறைகேடு, வழிப்பறி, மோசடி, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றங்கள், சிறையில் இருந்து தப்பித்தல், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம், வரதட்சணை மரணம், பொருளாதாரக் குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், விஷம் கலந்த பொருள்களை விற்பனை செய்தல், ஜாதி, மத ரீதியான வன்முறை ஈடுபட்டவா்கள் ஆகிய குற்றங்களில் தண்டனை பெற்றவா்கள் விடுதலை பெற தகுதியவற்றவா்கள்.

அதன் அடிப்படையில், தகுதியுடைவா்கள் கண்டறியப்பட்டு, படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக வேலூா் மத்திய சிறையில் இருந்து 7 போ், புழல் சிறையில் இருந்து 3 போ், சேலம், கோயம்புத்தூா் மத்திய சிறைகளில் இருந்து தலா 4 போ், வேலூா் பெண்கள் தனிச்சிறையில் இருந்து ஒருவா், மதுரை மத்திய சிறை, பாளையங்கோட்டை மத்திய சிறை, கடலூா் மத்திய சிறை, புழல் பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றில் தலா 2 போ் என மொத்தம் 27 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனா்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top