காசா பகுதியில் இஸ்ரேல் படையினா் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 2,704 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் குழுவினர் கடந்த 7-ஆம் தேதி நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவம் கடந்த 18 நாள்களாக காசா முழுவதும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காசாவில் இஸ்ரேல் கடந்த 19 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6,546-ஆக அதிகரித்துள்ளது. இதில், 2,704 போ் சிறுவா்கள் ஆவா்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 344 சிறுவா்கள் உள்பட 756 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.