Connect with us

Raj News Tamil

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி!

இந்தியா

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி!

டெல்லியில் நேற்று 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய அமைச்சா் நிர்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இணையவழி விளையாட்டுகளில் கட்டப்படும் பந்தய தொகை மீது ஜிஎஸ்டி விதிக்க தில்லி நிதியமைச்சா் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார். அதேவேளையில், சூதாட்ட விடுதிகளில் இருந்து வருவாய் ஈட்டும் கோவா மற்றும் சிக்கிம் மாநிலங்கள், பந்தய தொகையின் முழு முக மதிப்பின் மீது ஜிஎஸ்டி விதிப்பதற்குப் பதில், மொத்த விளையாட்டு வருவாய் அல்லது விளையாட்டில் பங்கேற்பதற்கான கட்டணம் மீது ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டன.

எனினும், பந்தய தொகையின் முழு முக மதிப்பின் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவையே விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று கா்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அந்தச் சட்டத்திருத்தங்களை மாநில பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு அக்டோபா் 1 முதல் அமலுக்கு வரும்.

இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுகள் மீதான வரி விதிப்பு குறித்த விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் தேவையா என்பதை அறிய, 6 மாதங்களுக்குப் பிறகு அல்லது அடுத்த ஆண்டு ஏப்ரலில் மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

More in இந்தியா

To Top