50 வயது பெண் நோயாளி.. பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளைஞர்..

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ். 28 வயதான இவர், சென்னைக்கு வேலை தேடுவதற்காக, சமீபத்தில் வந்துள்ளார்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இரவு தங்கி வந்த சதீஷ், அங்குள்ள 50 வயது பெண் நோயாளி ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினர் சதீஷை மடக்கி பிடித்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சதீஷை கைது செய்தனர். தற்போது, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News