ஜெட் வேகத்தில் வந்த கார்…! கண்ணிமைக்கும் நேரத்தில் பலியான 3-பேர்..

அரக்கோணம் அருகே ஜெட் வேகத்தில் வந்த கார் பொதுமக்கள் மீது மோதியதில் 3-பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உரிழந்தனர்.

அரக்கோணம் அருகே ஜெட் வேகத்தில் வந்த கார் பொதுமக்கள் மீது மோதியதில் 3-பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை பேருந்து நிறுத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மோதியதில், தூக்கி வீசப்பட்டனர். இதில் உண்ணாமலை,சீனிவாசன்,கன்னியப்பன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி மஞ்சுலா ஆகிய இருவரை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து வைத்து போலிசாரிடம் புகார் அளித்தனர்.

விபரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இறந்த 3 பேரின் உடல்களை கைப்பற்ற முயன்ற போது திடீரென போராட்டத்தில் இரங்கிய பொதுமக்கள் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கக்கோரியும் ,விபத்து ஏற்பட்ட பகுதிகளில் வேக தடை அமைக்க கோரி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம்–சோளிங்கர் பகுதியில் சுமார் 5-மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மாவட்ட அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் போராட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.