கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அனில் குமார் (54), அவரது மகள் நிரஞ்சனா (17), அனில் குமாரின் சகோதரி ஆஷா, இவரது மகன் கௌதம் (15) ஆகியோர் நேற்று மாலை பம்பா ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர்.
இவர்களில் ஆஷா மட்டும் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டார். விசாரணையில், சிறுவன் கௌதம் குளித்து கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற குமார், நிரஞ்சனா ஆகியோர் அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் நீரில் மூழ்கியவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பம்பா நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.