விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. 3 மணி நேர நிலவரம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்குப் பதிவு, தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 3 மணி நேர நிலவரப்படி, எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது தொடர்பான தகவல்கள், தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, 64.44 சதவீத வாக்குகள், 3 மணி நேர நிலவரப்படி பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News