திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் ஐ.டி. ஊழியரான செந்தில் குமார் தனது தாய் மற்றும் தந்தையுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேரையும் படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக 3 பேரும் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.