கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே PVG திரையரங்கம் உள்ளது. இங்கு பொம்மை நாயகி படம் பார்ப்பதற்காக, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒருவர் வந்துள்ளார்.
ஆனால், அவர் போதையில் இருந்ததால், திரையரங்க நிர்வாகத்தினர், டிக்கெட் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த அவர், தனது நண்பர்கள் 2 பேரை வரவழைத்து, திரையரங்க மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும், திரையரங்கையே கொழுத்திவிடுவோம் என்று கூறிய அவர்கள், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, திரையரங்கு நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவியை ஆய்வு செய்து, அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர்.