துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்.. காணாமல்போன பெண் சடலமாக மீட்பு..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் பகுதியில் உள்ள சோய்புக் பகுதியை சேர்ந்தவர் தன்வீர் அகமது. இவர், தனது சகோதரி காணவில்லை என்று கூறி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், அந்த 30 வயது பெண் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், ஷபீர் முகமது என்ற நபரின் மீது, காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, அந்த பெண்ணை, ஷபீர் முகமது குத்தி கொலை செய்துள்ளார்.

மேலும், குற்றத்தை மறைப்பதற்காக, உடலை துண்டு துண்டாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் புதைத்ததை ஒப்புக் கொண்டார். இதனைத்தொடர்ந்து, அந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News