கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, முன்னணி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள், கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஒரு சில நிறுவனங்கள் உடனுக்குடனும், ஒரு சில நிறுவனங்கள், ஊழியர்களின் பிரச்சனையை அறிந்து, சில மாத சம்பளங்களை சேர்த்து கொடுத்தும், பணிநீக்கம் செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்க, அமெரிக்காவில் உள்ள சர்வதேச வணிக நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் தனது ஊழியர்களை வித்தியாசமான முறையில் வெளியேற்றியுள்ளது.
அதாவது, அந்த நிறுவனத்தின் CEO – உடன் மீட்டிங் இருப்பதாக, ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அறிந்த ஊழியர்கள், அடித்துப் பிடித்துக் கொண்டு, மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளனர். “முக்கியமான அறிவிப்பு ஏதாவது இருக்கும்” என்று காத்திருந்த ஊழியர்களுக்கு, அதிர்ச்சியை தகவலை நிறுவனம் வழங்கியுள்ளது.
“எங்களை மன்னித்து விடுங்கள்; பொய்யாக இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தோம். இதைச் செய்வதற்காக மேனேஜர் மிகவும் வருந்தினார். எங்களுக்கு வேறு வழியில்லை, பெஸ்ட் ஆஃப் லக்’ எனக் கூறி வலுக்கட்டாயமாகப் பணி நீக்கம் செய்துள்ளனர்.
மேலும், ஊழியர்களுக்கு இரண்டு ஆப்ஷன்களை வழங்கிய அந்நிறுவனம், ஒன்று, உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேறலாம்..? அல்லது தங்களுடன் பணியாற்றிய ஊழியர்களை சந்தித்துவிட்டு, அவர்களுடன் பேசிவிட்டு, அங்கிருந்து வெளியேறலாம்? என்று தெரிவித்துள்ளனர்.
முன்னறிவிப்பு இன்றி ஊழியர்கள் வெளியேற்றப்படுவது முறையான செயல் அல்ல.. ஆனால், பல முன்னேறிய நாடுகளிலும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ள நாடுகளிலும் இப்படி நடக்கிறது என்றால், இந்தியா மாதிரியான நாட்டில் நிலைமை எப்படி இருக்கும் என்பது தான் அதிர்ச்சி அடைய வைக்கிறது.