இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 3,000 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 800 கோடியில் இருந்து 1,000 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிற சூழலில், கூடுதல் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
அடுத்த 4 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்குள் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான பயணத்தை வழங்கும் நோக்கில் 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும். கூடுதலாக ரயில்கள் இயக்கும் போது காத்திருப்போர் பட்டியல் பிரச்னை சரிசெய்யப்படும். அதற்கேற்ப ரயில்வேயின் உள்கட்டமைப்புகளும் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.