தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை : 35 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். அதன்படி தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜனவரி 1 முதல் இந்த மாதம்17-ம் தேதி வரை ஒருவார காலத்தில் சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி, திருட்டு, நகை பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 207 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11 முதல் நேற்று முன்தினம் (17-ம் தேதி) வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் 35 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்ற செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News