மதுரையில் காமெடி நடிகரின் காலை உடைத்த பாஜகவினர் 4 பேர் கைது..!!

மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆறுமுகம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.

மதுரை வெங்கடேஷை இரண்டு நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்தி சென்று, அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவரது இரு கால்களையும் உடைத்துவிட்டு தப்பினர். அப்போது காவித் துண்டை அந்த இடத்தில் தவறவிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ், பாஜகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால், பாஜகவினர் ஆத்திரத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இதனிடையே வெங்கடேஷ்க்கும் அவரது மனைவி பானுமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இதனையடுத்து பானுமதி பாஜகவிலுள்ள உறவினராக வைரமுத்து என்பவரிடம், இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார். ஏற்கனவே சமூக வலைதளப்பதிவு விவகாரத்தில் வெங்கடேஷ் மீது ஆத்திரத்தில் இருந்த வைரமுத்து, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஷின் கால்களை உடைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், வெங்கடேஷ் மனைவி பானுமதி, அவரது கார் ஓட்டுனர் மோகன் மற்றும் வைரமுத்து உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர். மேலும் துளசி என்பவரை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News