ஒத்த ஓட்டு பெற்ற 4 வேட்பாளர்கள் – அவருக்கு அவரே போட்டுக்கிட்டாரோ..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 4062 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 605 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதைத் தவிர்த்து, 36 வேட்பாளர்கள் ஒற்றை இலக்க வாக்குகளை பெற்றுள்ளனர். அதில் 4 சுயேட்சை வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர். 73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் இதுவரை ஒரு வாக்கு கூட பெறவில்லை.