சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளருக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக அம்பிகாபூர் மருத்துவமனைக்கு நேரில் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.