தாம்பரம் அடுத்த மதுரபாக்கம் அருகே உள்ள மூலச்சேரி, அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ராணி மற்றும் காளிதாஸ் இருவரும் பசுமாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அப்பகுதியில் உள்ள மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்ததில் ராணி மற்றும் காளிதாஸ் ஆகியோரின் 4 பசு மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்பை துண்டித்து மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருவாய் துறையினர் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் சேகரித்தனர். அதுபோல் கால்நடை மருத்துவர் அங்கேயே கூறாய்வு பரிசோதனை செய்து மின்சார கம்பி விழுததால் மரணம் என உறுதி செய்தார்.