மாடுகள் மீது லாரி மோதியதில் 4 மாடுகள் பலி : லாரி ஓட்டுநரை தாக்கிய பொதுமக்கள்

தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலை அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகளின் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியிதில் சம்பவ இடத்திலேயே 4 மாடுகள் பலியானது மேலும் 1 மாடு உயிருக்கு போராடி வருகிறது.

இதை பார்த்த பொதுமக்கள் லாரி ஓட்டுனரை பிடித்து கடுமையாக தாக்கி உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீர்கன்காரனை போலீசார் லாரி ஓட்டுன மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் ஓட்டுநர் பெயர் மணிகண்டன் என்பதும், மாடுகளின் உரிமையாளர் புருஷோத்தமன்‌ என்பதும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News