தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவித்தனர். இதையடுத்து இலவச வேட்டி, சேலை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர்.
கூட்டம் அதிகமானதால் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் மயக்கமடைந்தனர். இதில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 10 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.