பசங்க படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் கிஷோர். பின்னர் கோலி சோடா, சகா போன்ற படத்தில் நடித்து பிரபலமான இவர், சீரியல் நடிகை பிரீத்தா குமாரை காதிலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக இருவரும் தெரிவித்தனர். இவர், கிஷோரை விட 4 வயது மூத்தவர் என்பதால், இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை ப்ரீத்திகுமார் ஜோடியின் திருமணம் இன்று முடிந்துள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிய நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.