மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே பூலாங்குளம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் உள்ள கண்மாய்கரை மற்றும் கருவேல மரங்கள் நிறைந்த இடத்தில் மயில்கள் மயங்கி இறந்து கிடந்தன. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து நேற்று ஆய்வு மேற்கண்ட போது 18 மயில்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து இன்று 22 மயிகள் எடுக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் மயில்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் விவசாயம் நடைபெறுவதால் பயிர்களை பாதுகாக்க மருந்து வைக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் விசாரணை முடிந்த பின்னர் தான் முழு விபரம் தெரியவரும் என கூறினர்.
மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நகர் அருகே 42 க்கும் மேற்பட்ட மயில் இறந்தது குறிப்பிடதக்கது. தற்போது கருப்பாயூரணி பகுதியில் 40 மயில்கள் கண்டறியப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கிடைக்கப்பட்ட மயில்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மயில்கள் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.