Connect with us

Raj News Tamil

2 தங்கப் பதக்கம் வென்ற இந்தியா.. பளு தூக்குதல் போட்டி.. முதல் இந்திய பெண் செய்த சாதனை..

விளையாட்டு

2 தங்கப் பதக்கம் வென்ற இந்தியா.. பளு தூக்குதல் போட்டி.. முதல் இந்திய பெண் செய்த சாதனை..

உலக மாஸ்டர் பளுதூக்குதல் சேம்பியன்ஷிப் போட்டி, மங்கோலியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில், ஸ்குவாட், பென்ஞ் ப்ரெஸ், டெட் லிஃப்ட் ஆகிய 3 வகைகளில் பளு தூக்குதல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில், இந்தியா சார்பில், புனேவை சேர்ந்த டாக்டர் சர்வாரி இனாம்டர் என்ற 40 வயது பெண் கலந்துக் கொண்டார். 2 குழந்தைகளுக்கு தாயான இவர், 57 கிலோ எடை பிரிவில், போட்டியில் கலந்துக் கொண்டார்.

இந்த போட்டியில், ஸ்குவாட் பிரிவில், 127.5 கிலோ, பென்ஞ் ப்ரெஸ் பிரிவில் 75 கிலோ, டெட் லிப்ட் பிரிவில் 147.5 கிலோ என்று ஒட்டுமொத்தமாக 350 கிலோவை தூக்கியுள்ளார். இதன்மூலம், தன்னுடைய சக போட்டியாளர்களை வீழ்த்தி, தங்க பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

இதேபோன்று, எக்யூப்டு பிரிவில், 395 கிலோ எடையை தூக்கி, அதிலும் சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சர்வாரி, “நான் இந்தியாவுக்கான பதக்கம் பெற முயற்சி செய்தேன். ஆனால், நான் உலக சேம்பியன் பட்டம் வெல்வேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை.

இதற்கு முன்பு, நான் இந்திய அளவில் சேம்பியன் ஆகியிருக்கிறேன், ஆசியா-பிசிபிக்-ஆப்ரிக்கா அளவில் சேம்பியன் ஆகியிருக்கிறேன். ஆனால், இந்த முறை உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதேபோன்று, இன்னொரு இந்திய வீராங்கணையான ரீனி தரக்கன் 69 கிலோ எடை பிரிவில், தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

More in விளையாட்டு

To Top