தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு, செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், புல் அறுப்பதற்காக, செல்வி சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இறுதியில், வாழைத் தோட்டத்தின் உள்ளே சடலமாக கிடந்த செல்வியை பார்த்து, ஒட்டுமொத்த குடும்பமும், கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். செல்வி அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால், நகைக்காக நடந்த கொலை என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தான், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதாவது, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இருளப்பனும், செல்வியும், பல ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், சமீபத்தில், இருளப்பனுக்கு, காசநோய் ( TB ) ஏற்பட்டுள்ளது.
இதனால், அவரிடம் பேசுவதை, செல்வி தவிர்த்துள்ளார். இதன்காரணமாக, அவர் மீது இருளப்பனுக்கு கடும் கோபம் இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று, செல்வியை சந்தித்த இருளப்பன், நைசாக பேசி, உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், இதனை புரிந்துக் கொண்ட அவர், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், கடும் ஆத்திரம் அடைந்த இருளப்பன், கட்டையை எடுத்து, தலையில் ஓங்கி அடித்துள்ளார். இந்த தாக்குதலில், ரத்த வெள்ளத்தில் மிதந்து, பரிதாபமாக செல்வி உயிரிழந்தார். இந்த தகவல்களை விசாரணையில் கண்டறிந்த காவல்துறையினர், இருளப்பனை கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.