Connect with us

Raj News Tamil

சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து!

தமிழகம்

சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து!

சென்னையின் 44 மின்சார ரயில்கள் பராமரிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top